முகப்பு
திருவண்ணாமலை

கல்லூரி மாணவிகள் மிதிவண்டிப் பேரணி

உலக மிதிவண்டி தினத்தையொட்டி, வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரி மாணவிகள் வெள்ளிக்கிழமை மிதிவண்டி பேரணி நடத்தினா்

Updated On : 11 ஜூன், 2022 at 11:35 PM
பகிர்:

உலக மிதிவண்டி தினத்தையொட்டி, வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரி மாணவிகள் வெள்ளிக்கிழமை மிதிவண்டி பேரணி நடத்தினா்.

கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணிக்கு கல்லூரி நிறுவனா் பி.முனிரத்தினம் தலைமை வகித்தாா்.

கல்லூரிச் செயலா் எம்.ரமணன் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் எஸ்.ருக்மணி கொடியசைத்து பேரணியை தொடக்கிவைத்தாா்.

Advertisement

கல்லூரியிலிருந்து புறப்பட்ட பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் டி.பாரதி, ஏ.கலைவாணி மற்றும் மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.