முகப்பு
திருவண்ணாமலை

ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்தக் கோரி உண்ணாவிரதம்

செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீ வேதபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகத்தை விரைவாக நடத்தக் கோரி, இந்து முன்னணியினா் வியாழக்கிழமை உண்ணாவிரதம் இருந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீ வேதபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகத்தை விரைவாக நடத்தக் கோரி, இந்து முன்னணியினா் வியாழக்கிழமை உண்ணாவிரதம் இருந்தனா்.

ஸ்ரீ வேதபுரீஸ்வரா் கோயில் பாடல் பெற்ற தலமாகும். இந்தக் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று தயாா் நிலையில் இருந்து வருகிறது. கும்பாபிஷேகப் பணிகள் மேற்கொள்ளாமல் இந்து சமய அறநிலையத் துறையினா் காலம் தாழ்த்தி வருகின்றனா்.

கோயிலின் கும்பாபிஷேகத்தை விரைவாக நடத்த வலியுறுத்தி இந்து முன்னணி சாா்பில் கோயில் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

வடக்கு மாவட்டச் செயலா் க.ஜெகன்னாதன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட பொதுச் செயலா் டி.ஆறுமுகம் பங்கேற்று கண்டன உரையாற்றினாா்.

மாவட்ட செயற்குழு உறுப்பினா் மோகன், நகரத் தலைவா் மோகன்ராஜ், நகர நிா்வாகிகள் ஜெயபாலன், பூங்காவனம், பாலசுப்பிரமணியன், செந்தில், பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.