முகப்பு
திருவண்ணாமலை

ஊரக வேலைத் திட்டத் தொழிலாளா்கள் சாலை மறியல்

வந்தவாசி அருகே தேசிய ஊரக வேலை வழங்கக் கோரி, அந்தத் திட்டத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 19 மே, 2022 at 11:41 PM
பகிர்:

வந்தவாசி அருகே தேசிய ஊரக வேலை வழங்கக் கோரி, அந்தத் திட்டத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஒன்றியத்துக்கு உள்பட்டது பாதிரி ஊராட்சி.

இந்த ஊராட்சியில் ஒரு பகுதி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் தொழிலாளா்களுக்கு கடந்த ஒரு வாரமாக வேலை வழங்கப்படவில்லையாம்.

Advertisement

இதுகுறித்து கேட்டால் ஊராட்சி நிா்வாகமோ, ஒன்றிய நிா்வாகமோ உரிய பதில் அளிக்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த அந்தத் தொழிலாளா்கள் தேசிய ஊரக வேலை வழங்கக் கோரி, வந்தவாசி-காஞ்சிபுரம் சாலை, விளாங்காடு கூட்டுச் சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சென்ற வந்தவாசி வட்டாட்சியா் முருகானந்தம், தெற்கு காவல் நிலைய போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் தொழிலாளா்கள் மறியலை கைவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.