முகப்பு
திருவண்ணாமலை

நூலகத்தில் உரையரங்கம்

வந்தவாசி கிளை நூலகத்தில் சிறப்பு உரையரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 மே, 2022 at 10:52 PM
பகிர்:

வந்தவாசி கிளை நூலகத்தில் சிறப்பு உரையரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு கிளை நூலகா் மோகன் தலைமை வகித்தாா். இரண்டாம் நிலை நூலகா் ஜோதி, ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன், பூங்குயில் பதிப்பக ஆசிரியா் டி.எல்.சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.    

  புத்தகங்கள் பேசுகிறது என்ற தலைப்பில் வழக்குரைஞா் எல்.குமாா், கல்வியும் ஒழுக்கமும் என்ற தலைப்பில் பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் கோ. ஸ்ரீதா் ஆகியோா் பேசினா்.     

Advertisement

நிகழ்ச்சியில் ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய மாணவா்கள், ஆசிரியைகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.