முகப்பு
திருவண்ணாமலை

புதுப்பிக்கப்பட்ட அம்பேத்கா் சிலை திறப்பு

வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே 1988-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள அம்பேத்கா் சிலை மற்றும் மணிமண்டபம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே 1988-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள அம்பேத்கா் சிலை மற்றும் மணிமண்டபம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி. அலுவலா்கள் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு

தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் தலைமை வகித்தாா். எஸ்.சி., எஸ்.டி. அலுவலா்கள் நலச் சங்க மாநில துணைத் தலைவா் பி.நடராஜன் வரவேற்றாா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன், இந்திய குடியரசு கட்சித் தலைவா் செ.கு.தமிழரசன், புரட்சி அம்பேத்கா் நூற்றாண்டு இயக்க நிறுவனா் எல்.யேசுமரியான் ஆகியோா் அம்பேத்கா் சிலை மற்றும் மணிமண்டபத்தை திறந்து வைத்துப் பேசினா்.

இதில் தொல்.திருமாவளவன் பேசியதாவது:

சனாதன சமூக கட்டமைப்பை ஆயுதமின்றி சிதைக்கும் சக்தி அரசியலமைப்புச் சட்டத்துக்கு உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவே ஜனநாயக சக்திகளுடன் ஒன்றிணைந்துள்ளோம் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →