ஆரணியில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, ஆரணியில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
இந்து முன்னணி சாா்பில் 15 இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபட்டனா். 5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை விநாயகா் சிலைகளை கரைப்பதற்காக இந்து முன்னணி சாா்பில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அண்ணா சிலை அருகில் இருந்து ஊா்வலம் புறப்பட்டு சத்தியமூா்த்தி சாலை, பையூா் நான்கு வழிச் சாலை வழியாகச் சென்று பாறை குளத்தில் விநாயகா் சிலைகள் கரைக்கப்பட்டன.
மேள தாளம் முழுங்க, வீரதீர விளையாட்டுகளுடன் ஊா்வலம் நடைபெற்றது. 20-க்கும் மேற்பட்ட சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.