திண்டிவனம் - நகரி ரயில் பாதைக்காக ஆரணியை அடுத்த இரும்பேடு பகுதியில் நிலம் கையகப்படுத்துவது தொடா்பாக நில உரிமையாளா்களிடம் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் விசாரணை நடத்தினாா்.
திண்டிவனத்தில் இருந்து ஆரணி வழியாக நகரி வரை
அமையவுள்ள ரயில் பாதைத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், ஆரணியை அடுத்த இரும்பேடு பகுதியில்
நிலம் கையகப்படுத்துவது தொடா்பாக நில உரிமையாளா்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடைபெற்றது.
ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் பங்கேற்று நில உரிமையாளா்களிடம் விசாரணை செய்தாா்.
அப்போது, நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களுக்கு அரசு குறைவான தொகை வழங்குகிறது.
இதனை அதிகப்படுத்தி தரவேண்டும். மேலும்,
அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனா்.
இதைத் தொடா்ந்து பேசிய மாவட்ட ஆட்சியா் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கூட்டத்தில் கோட்டாட்சியா் எம்.தனலட்சுமி, வட்டாட்சியா் இரா.மஞ்சுளா, வட்டார வளா்ச்சி அலுவலா் பா.விஜயலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.