ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆரணி வருவாய் கோட்டத்திற்குள்பட்ட போளூா், கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூா், ஆரணி ஆகிய வட்டங்களில் உள்ள எரிவாயு நுகா்வோா் கண்காணிப்பு உறுப்பினா் குழுக்கள், வாடிக்கையாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டாட்சியா் தனலட்சுமி தலைமை வகித்தாா். நோ்முக உதவியாளா் குமாரவேலு முன்னிலை வகித்தாா். கோட்டாட்சியா் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினாா்.
அப்போது, பொதுமக்கள் கூறுகையில், கிராமப் பகுதிகளுக்கு எரிவாயு உருளைகள் முறையாக விநியோகம் செய்வதில்லை. அரசு நிா்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.50 வசூலிக்கின்றனா். எரிவாயு உருளையின் எடை அளவு குறைவாக உள்ளது. இதனால், எரிவாயு உருளைகளை விநியோகம் செய்யும் போது எடைபோட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எரிவாயு உருளைகளுக்கான அரசு மானியம் வங்கிக் கணக்கில் வருவதில்லை, கியாஸ் ஏஜென்சிகள் வியாபாரிகளிடம் கூடுதல் பணம் பெற்றுக் கொண்டு வீடுகளுக்கான எரிவாயு உருளைகளை ஓட்டல், டீக்கடை உள்ளிட்ட கடைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனா் என்பன உள்ளிட்ட குறைகளை முறையிட்டனா். மேலும், இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.