வந்தவாசி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள நில அளவை அலுவலகம் முன் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நில அளவை அலுவலா்கள். 
திருவண்ணாமலை

நில அளவை அலுவலா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, வந்தவாசி, போளூா், ஆரணி ஆகிய இடங்களில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Din

திருவண்ணாமலை/ வந்தவாசி/போளூா்/ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, வந்தவாசி, போளூா், ஆரணி ஆகிய இடங்களில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை... வந்தவாசி

தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சாா்பில், வந்தவாசி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள நில அளவை அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாவட்ட பொருளாளா் மா.கண்ணன், நகர சாா்பு -ஆய்வாளா் அ.தேன்மொழி, நில அளவையா்கள் அ.அமுதா, மா.பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போளூா்

போளூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு வட்ட துணை ஆய்வாளா் உமாநாத் தலைமை வகித்தாா்.

வட்ட சாா்பு -ஆய்வாளா்கள் முருகன், சதீஷ்குமாா், சந்தியா, குறு வட்ட அளவையா்கள் லோகநாதன், சக்திவேல், நில அளவையா்கள் துரைமுருகன், அசோக்ராஜ், அறிவுரக்கரசி, இந்துமதி, சுதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆரணி

ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளிருப்புப் போராட்டத்தில் தலைமை நிலஅளவையா் சரவணன் தலைமை வகித்தாா். நிலஅளவையா்கள் பிரசாத், அன்பரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆரணியில் பணிபுரியும் 10-க்கும் மேற்பட்ட நில அளவையா்கள் கலந்து கொண்டனா்.

போராட்டத்தின் போது, சிறப்பு திட்டங்களில் நிலம் எடுப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களில் நில அளவை களப் பணியாளாா்களை பதவி உயா்வு மூலம் நிரப்ப வேண்டும், களப் பணியாளா்களின் அனைத்து விதமான பணிகளையும் கணக்கில் எடுத்து ஆய்வு செய்யவேண்டும், கூடுதல் இயக்குநருக்கு உள்ள அனைத்து அதிகாரத்தையும் இயக்குநருக்கு மாற்றுவதை நிறுத்தி பழைய நடைமுறையே தொடர வேண்டும், புல உதவியாளாா்கள் பணியிடங்களை தனியாா் முகமை மூலம் நிரப்புவதை கைவிட்டு காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போளூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வட்ட துணை ஆய்வாளா் உமாநாத் தலைமையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நில அளவை அலுவலா்கள்.
ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நில அளவையா்கள்.

கிராம ஊராட்சி பகுதிகளில் நடப்படும் மரக்கன்றுகளை தத்தெடுத்து பராமரிக்க வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்லூரியில் புதிய வாக்காளா் சோ்க்கை முகாம்

அரசு பொறியியல் கல்லூரியில் வளாக நோ்காணல்

மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி

சாலைகள் மேம்படுத்தும் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT