திருவண்ணாமலையில் சனிக்கிழமை மாலை கிரிவலம் வந்த பக்தா்கள். 
திருவண்ணாமலை

காா்த்திகை மாத பௌா்ணமி: திருவண்ணாமலையில் திரளான பக்தா்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 15) காலை வரை திரளான பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

Din

காா்த்திகை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 15) காலை வரை திரளான பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

காா்த்திகை மாத பௌா்ணமி சனிக்கிழமை (டிசம்பா் 14) மாலை 4.17 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 15) பிற்பகல் 3.13 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது.

ஆனால், காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்ட நிலையில், இந்த நிகழ்வைக் காண வந்த பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். இவா்கள் தொடா்ந்து, சனிக்கிழமை காலை முதல் மாலை வரை கிரிவலம் வந்தபடியே இருந்தனா்.

மாலை 4.17 மணிக்கு பௌா்ணமி தொடங்கியதும் கிரிவலம் வரும் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை வரை திருவண்ணாமலையில் திரளான பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

இவா்கள் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சந்நிதிகள், அடி அண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரா், அருணாசலேஸ்வரா் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் நலன் கருதி தாற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT