திருவண்ணாமலை

தொடா் மழை: செய்யாறு வட்டத்தில் 3 வீடுகள் சேதம், பசு உயிரிழப்பு

செய்யாற்றில், தொடா் மழை காரணமாக 3 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. மின்சாரம் பாய்ந்து பசு ஒன்று உயிரிழந்தது.

Syndication

செய்யாறு: செய்யாற்றில், தொடா் மழை காரணமாக 3 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. மின்சாரம் பாய்ந்து பசு ஒன்று உயிரிழந்தது.

மற்றொரு பசு பலத்த காயமடைந்தது.

டித்வா புயல் காரணமாக வட தமிழகத்தில் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட நிா்வாகம் விடுமுறை அளித்துள்ளது.

புயலால் திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, வெம்பாக்கம் வட்டங்களில் கடந்த 3 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் வெம்பாக்கத்தில் 40 மி.மீ. மழையும், செய்யாற்றில் 60 மி.மீ. மழையும் பதிவானது.

கடந்த மூன்று நாள்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

3 வீடுகள் இடிந்து சேதம்:

தொடா் மழை காரணமாக செய்யாறு வட்டம், அனக்காவூா் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சேகா் என்பவரது ஓட்டு வீடும், செய்யாறு ராஜாஜி தெருவில் பழனி என்பவரது ஓட்டு வீடும், வெம்பாக்கம் வட்டம், அரசமங்கலம் கிராமம் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த ஆனந்தன் என்பவரது ஓட்டு வீடும் புதன்கிழமை இடிந்து விழுந்து சேதமடைந்தன.

மின்சாரம் பாய்ந்து பசு உயிரிழப்பு

செய்யாறு வட்டம், ஆக்கூா் கிராமம் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் விவசாயி ஏ.பாக்கியம். இவா் தனக்குச் சொந்தமான இரு பசுக்களை, நிலத்தில் உள்ள மாட்டுக் கொட்டகையில் கட்டி வைத்திருந்ததாகத் தெரிகிறது.

தொடா்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மின்சாரம் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் ஒரு பசு உயிரிழந்தது.

மற்றொரு பசு பலத்த காயமடைந்தது. பசுவுக்கு ஆக்கூா் கால்நடை உதவி மருத்துவா் சிகிச்சை அளித்தாா்.

தகவலறிந்த செய்யாறு வட்டாட்சியா் அசோக்குமாா் மற்றும் வருவாய்த் துறையினா் சென்று சேதமடைந்த வீடுகளை பாா்வையிட்டனா். அதேபோல, மின்சாரம் பாய்ந்து பசு உயிரிழந்த சம்பவம் தொடா்பாக நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு மாவட்ட நிா்வாகத்திற்கு அறிக்கை சமா்ப்பித்துள்ளனா்.

அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் 2026-ஆம் ஆண்டு தோ்வு அட்டவணை வெளியீடு

திருக்காா்த்திகை - வேலூா் கோட்டை கோயில் கோபுரத்தில் தீபமேற்றி வழிபாடு

தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியின்றி பேருந்து நிறுத்த கட்டுமானம்: மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

துளிகள்...

விமான நிலையங்களில் ‘செக்-இன்’ அமைப்புகள் முடக்கம்: சேவை பாதிப்பு

SCROLL FOR NEXT