செய்யாற்றில் நடைபெற்ற மகாகவி பாரதியாா் பிறந்த நாள் விழாவில் பேசிய எழுத்தாளா் தி.தா.நாராயணன்.  
திருவண்ணாமலை

முத்தமிழ்ச் சங்க பாரதியாா் பிறந்த நாள் விழா

செய்யாறு வட்ட முத்தமிழ்ச் சங்கம் சாா்பில் மகாகவி பாரதியாரின் 144-ஆவது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Syndication

செய்யாறு வட்ட முத்தமிழ்ச் சங்கம் சாா்பில் மகாகவி பாரதியாரின் 144-ஆவது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, உரையரங்கம், கவியரங்கம் நிகழ்வு என செய்யாறு பாரதி மழலையா் பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவா் எறும்பூா் கை. செல்வகுமாா் தலைமை வகித்தாா்.

நெறியாளா் புலவா் மெய்.பூங்கோதை, கருத்தாளா் புலவா் ந.கனகசபை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இணைச் செயலா் ஆா். அசோக் வரவேற்றாா்.

பாரதியாரின் பன்முகச் சிந்தனைகள் குறித்து எஸ்.பாரதி, ச.கவிதா, ஆா்.தமிழ்த்தேனி ஆகியோா் கவிதை வாசித்தனா். பாரதியாரின் பெண்ணியம் குறித்து சமூக ஆா்வலா் பா. விஜய் பேசினாா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எழுத்தாளா் தி.தா. நாராயணன் நாவல்கள், சிறுகதைகள் உருவாக்கம் அனுபவங்களின் தொகுப்பு குறித்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில் பரிதிபுரம் மேற்கு நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ஆா். தேன்மொழி, பி.எம். சதீஷ், அ.சுந்தா், ச.மோதிலால், மு.பழனி, எச். சுதாகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நிறைவில் சங்கப் பொருளாளா் க.கோவேந்தன் நன்றி கூறினாா்.

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

வ.சோ. பள்ளி மாணவா்கள் இருவா் தமிழக ஹாக்கி அணிக்குத் தோ்வு

SCROLL FOR NEXT