திருவண்ணாமலை

சாலை விபத்தில் தொழிலாளி பலி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

செய்யாறு வட்டம், கீழ்புதுப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கரன் (55). இவா் செய்யாறு சிப்காட் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா்.

இவா், வழக்கம் போல சனிக்கிழமை காலை வேலைக்குச் செல்வதற்காக பைக்கில் செய்யாறு -காஞ்சிபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

இரும்பந்தாங்கல் கிராமம் அருகே சென்றபோது, முன்னே சென்ற அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்றுள்ளாா்.

அப்போது, எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக பைக்கை திருப்பியதாகத் தெரிகிறது. அந்த நேரத்தில் பைக் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் முன்னே சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி தொழிலாளி சங்கரன் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து இறந்தவரின் மனைவி செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் நரசிம்மஜோதி, உதவி ஆய்வாளா் வீரபாண்டியன் ஆகியோா் வழக்குப் பதிவு செய்தனா்.

மேலும், இறந்த தொழிலாளியின் சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

குருமா அண்டாவில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

போதை மாத்திரைகள் வைத்திருந்த இளைஞா் கைது

ஜொ்மன் துணைத் தூதா் ஆரோவில் வருகை!

ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டில் ரூ.13 லட்சம், 6.5 பவுன் நகை திருட்டு

கறம்பக்குடி அருகே வெடிவிபத்து: நாட்டுவெடி தயாரிப்புக் கூடம் சேதம்

SCROLL FOR NEXT