திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நகராட்சியில் 18-ஆவது வாா்டு சிறப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
நகா்மன்ற உறுப்பினா் கவிதா கருணாகரன் தலைமையில் கோட்டைமேடு பகுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கோட்டைமேடு மற்றும் சனிக்கவாடி சாலை, மகளிா் காவல் நிலையம், டிஎஸ்பி அலுவலகம் என 18-ஆவது வாா்டு பகுதிகளில் கழிவுநீா் கால்வாய் அமைத்து கழிவுநீரை வெளியேற்ற வேண்டும். மேலும் வீடுதோறும் சுத்தமான குடிநீா் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும், தெருக்களில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்துத்
தரவேண்டும் என அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் மனு அளித்தனா்.
கூட்டத்தில் பொதுமக்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா் கலந்துகொண்டனா்.