வேலூர்

தமிழக செம்மரத் தொழிலாளி கைது

DIN

திருப்பதி அருகே செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத் தொழிலாளர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூகறப்படுவது:
திருப்பதி அருகே ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவு போலீஸார் புதன்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த வனப்பகுதியில் 10 முதல் 10 செம்மரத் தொழிலாளர்கள் இருப்பதற்கான அடையாளங்கள் தெரிந்தன. இதையடுத்து, போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியதில், ஈத்தகுண்டா வனப்பகுதியில் தொழிலாளிகள் செம்மரக்கட்டைகளை எடுத்துச் செல்வதைக்  கண்டனர். 
போலீஸாரைப் பார்த்ததும் தொழிலாளர்கள் செம்மரக்கட்டைகளைப் போட்டு விட்டு வனத்திற்குள் தப்பியோடினர். அவர்களை பின் தொடர்ந்து சென்று போலீஸார் ஒருவரைக் கைது செய்து, அவரிடம் இருந்து 12 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்டவர் திருவண்ணாமலை மாவட்டம் பாதிரி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பது தெரிய வந்தது என்று போலீஸார் கூறினர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT