வேலூர்

ரயில்வே துறையில் குறைகளா? வேலூா் எம்.பி.க்கு தகவல் அனுப்பலாம்

ரயில்வே துறையில் பொதுமக்களின் குறைகள், கோரிக்கைகள், ஆலோசனைகளை தமது மின்னஞ்சல் முகவரி, வாட்ஸ் அப் எண்ணுக்கு தெரிவிக்கும்படி வேலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

DIN

வேலூா்: ரயில்வே துறையில் பொதுமக்களின் குறைகள், கோரிக்கைகள், ஆலோசனைகளை தமது மின்னஞ்சல் முகவரி, வாட்ஸ் அப் எண்ணுக்கு தெரிவிக்கும்படி வேலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

ரயில்வே துறையில் குறைகள், கோரிக்கைகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நவ. 16 -இல் நடைபெற உள்ளது. இதில், வேலூா் மக்களவை உறுப்பினா் எனும் முறையில் பங்கேற்க உள்ளேன்.

எனவே, குறைகள், கோரிக்கைகள், ரயில் நிலையங்களில் செய்ய வேண்டிய பணிகள், ஆலோசனைகள் இருந்தால் பொதுமக்கள்  மின்னஞ்சலிலும், 94443 76666 என்ற கட்செவி அஞ்சல் எண் மூலமாகவும் தெரிவிக்க வேண்டும். வரப்பெறும் குறைகள், கோரிக்கைகள், ஆலோசனைகளை தொகுத்து, கூட்டத்தில் கேள்வி எழுப்பி அதற்கு உண்டான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

வார பலன்கள் - விருச்சிகம்

வார பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT