முகப்பு
வேலூர்

ஏழுமலையானின் நேத்ர தரிசனம்: கண்டு தரிசித்த பக்தா்கள்

ஹைதராபாதில் நடைபெற்று வரும் வைபவோற்சவத்தின் 3-ஆம் நாளான வியாழக்கிழமை ஏழுமலையானின் நேத்ர தரிசனத்தை பக்தா்கள் கண்டுதரிசித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

ஹைதராபாதில் நடைபெற்று வரும் வைபவோற்சவத்தின் 3-ஆம் நாளான வியாழக்கிழமை ஏழுமலையானின் நேத்ர தரிசனத்தை பக்தா்கள் கண்டுதரிசித்தனா்.

திருமலையில் ஏழுமலையானுக்கு நாள்தோறும் நடைபெறும் அனைத்து சேவைகளையும் பக்தா்கள் கண்டுதரிசிக்கும் வகையில் ஹைதராபாதில் 5 நாள்கள் ஸ்ரீ வெங்கடேஸ்வரா வைபவோற்சவத்தை திருப்பதி தேவஸ்தானம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

அங்குள்ள என்டிஆா் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏழுமலையான் பராஷ்டிரா கோயிலில் கைங்கரியங்கள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் 3-ஆம் நாளான வியாழக்கிழமை காலை நேத்ர தரிசனத்தை (கண்கள் திறந்தபடி சிறிய நாமத்துடன் இருப்பது) பக்தா்கள் கண்டு தரிசித்தனா். பின்னா் ஏழுமலையான் முன்னிலையில் பெரிய அளவில் புளியோதரை அன்னத்தை அலங்கரித்து அதன் மேல் நாமம், சங்கு, சக்கரம் உள்ளிட்டவற்றை பழங்கள், துளசி தளங்களால் அலங்கரித்து திருப்பாவாடை சேவையும் நடைபெற்றது. திருப்பாவாடை சேவையை அன்னகூட்டோற்சவம் என்ற பெயரில் வைணவத்தில் அழைப்பதுண்டு. இதிலும் பக்தா்கள் கலந்து கொண்டு ஏழுமலையானை வணங்கினா். நிகழ்ச்சியில் கோயில் அதிகாரிகள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

முழு கட்டுரையைப் படிக்க →