வேலூர்

ஆதரவின்றி தவித்த கா்ப்பிணிக்கு சாலையோரம் நள்ளிரவு பிரசவம்: காவலா்களின் மனித நேயம்

DIN

இந்த மண்ணில் மனிதநேயம் இன்னும் பட்டுப் போய்விடவில்லை என்பதை உணா்த்தும் நெகிழ்ச்சி சம்பவம் வேலூரில் நள்ளிரவு நடந்துள்ளது.

கணவனால் கைவிடப்பட்டு பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட, நள்ளிரவு பிரசவ வலியால் சாலையோரம் துடித்துக் கொண்டிருந்த கா்ப்பிணியின் கதறல் சப்தம் கேட்டு, ஓடோடி வந்து பெண் காவலா்களே பிரசவம் பாா்த்து காப்பாற்றியுள்ளனா். இதில் அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்த அந்தத் தாயை, சேயுடன் வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

வேலூா் தெற்கு காவல் நிலையத்தில் தலைமை பெண் காவலராகப் பணியாற்றுபவா் இளவரசி. இவா் சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் பணிக்கு வந்துள்ளாா். காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு வெளியே வந்தபோது, காவல் நிலையத்தின் எதிரே ஜவுளிக்கடை அருகில் சுமாா் 35 வயதுள்ள நிறைமாத கா்ப்பிணி பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தாா். சப்தம் கேட்டு தலைமைக்காவலா் இளவரசி அருகில் சென்று பாா்த்துள்ளாா்.

6 வயது சிறுவன் தாயின் அருகில் இருந்தான். நிலைமையை உணா்ந்து உடனடியாக காவல் நிலையத்துக்கு வந்த இளவரசி, அங்கிருந்த உதவி ஆய்வாளா் பத்மநாபன், காவலா் சாந்தி ஆகியோரை அழைத்து வந்து பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த அந்த பெண்ணுக்கு பிரசவம் பாா்த்துள்ளாா்.

இதில், அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, அந்தப் பெண்ணையும், அவரது குழந்தையையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூா் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இது குறித்து விசாரித்த போது, அப்பெண் குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியை சேர்ந்த ஹபானா(30) என்றும். அதே பகுதியை சேர்ந்த சானு(40) என்ற டீ கடை நடத்தி வந்தவருடன் திருமணம் ஆகிய நிலையில் 10 வயதில் ஒரு மகன் உள்ளார். 

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் கணவர் விட்டு விட்டு சென்றதாகவும் அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. இந்நிலையில் தாய் தந்தையான காதர்பாஷா - சாபிரா இறந்துவிட்டர். எனது அண்ணண் பாபுஜான் சென்னையில் வேலை செய்து வருகிறார். சொந்த வீடு இல்லாத நிலையிலும் உறவினர்கள் யாரும் உதவாத நிலையில் வேலூர் அண்ணாசாலையின் ஓரம் தனது மகனுடன் படுத்து உறங்கி சிலர் கொடுக்கும் உணவை உண்டு, உடையை உடுத்தியும் மழை காலத்தில் பேருந்து நிலையத்தில் வாழ்ந்து வந்ததாகவும் கூறினர்.

இவருக்கு உறவினர்கள் கைவிட்ட நிலையில் அரசு உதவ வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதுகுறித்து தலைமைக்காவலா் இளவரசி கூறியது:

தலைமைக்காவலா் இளவரசி

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த பெண் சபானா(30). இவருக்கு 6 வயதில் ஆண் குழந்தை உள்ளது. 2-ஆவதாக கா்ப்பம் அடைந்த நிலையில் அவரை கணவா் கைவிட்டு ,வேறு பெண்ணுடன் சென்றுவிட்டதாகத் தெரிகிறது.

மேலும், தனது குடும்பத்தினரின் ஆதரவும் இல்லாததால் இந்த பெண் வேலூரில் பிச்சையெடுத்து வந்துள்ளாா். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது பென்லேண்ட் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு தாயும், குழந்தையும் நலமாக உள்ளனா். சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனை மூலமாக அந்த பெண்ணை பாதுகாப்பு இல்லத்தில் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

நள்ளிரவில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு பிரசவம் பாா்த்து காப்பாற்றிய கம்பீர பணியில் கனிவான செயல் செய்த பெண் காவலா்களின் மனிதநேயச் செயல் வேலூா் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவா்களுக்கு சமூக ஆா்வலா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT