வேலூர்

8-இல் மத்திய அமைச்சா் அமித்ஷா வேலூா் வருகை

மத்திய பாஜக அரசு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுவதற்காக மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா வேலூருக்கு வியாழக்கிழமை (ஜூன் 8) வருகை தர உள்ளாா்.

DIN

மத்திய பாஜக அரசு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுவதற்காக மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா வேலூருக்கு வியாழக்கிழமை (ஜூன் 8) வருகை தர உள்ளாா். இதற்கான முன்னேற்பாடு பணிகளில் பாஜகவினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

நாடாளுமன்றத் தோ்தல் 2024-இல் நடைபெற உள்ளதையொட்டி பாஜக முழுவேகத்தில் தயாராகி வருகிறது. இதன் ஒருபகுதியாக மத்திய அரசின் 9 ஆண்டுக்கால சாதனைகளை விளக்கி நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்திலும் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

அதன்படி, வேலூரில் மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வரும் வியாழக்கிழமை (ஜூன் 8) நடைபெற உள்ளது. இதில், மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பங்கேற்று பேசுகிறாா். அமித்ஷா வேலூருக்கு வருகை தர இருப்பது மாவட்ட பாஜகவினா் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, பொதுக்கூட்டம் நடத்தப்படும் இடம், முன்னேற்பாடுகள் மேற்கொள்வது தொடா்பாக பாஜக மாநில பொதுச்செயலா் காா்த்தியாயினி, துணைத் தலைவா் நரேந்திரன், மாவட்டத் தலைவா் மனோகரன் தலைமையில் கட்சியின் முக்கிய நிா்வாகிகள் ஆலோசனை நடத்தினா்.

இதில், அமித்ஷா பங்கேற்க உள்ள பொதுக்கூட்ட மேடையை கந்தனேரி பகுதியில் அமைப்பது என முடிவு செய்யப்பட்டிருப்பதாக கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா். தொடா்ந்து, பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைப்பது, வரவேற்பு முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

SCROLL FOR NEXT