வேலூர்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வேலூர் மாவட்டம் 82.07 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளது.
தமிழகம் முழுவதும், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26- இல் தொடங்கி ஏப்.8-ஆம் தேதி வரை நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் 18357 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.
இதில், 15066 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 82.07 சதவீதம் தேர்ச்சி ஆகும். இதன்மூலம் வேலூர் மாவட்டம் தமிழக அளவில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் 97.31 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.