கெங்கையம்மன் கோயிலில் இருந்து நடைபெற்ற பூ கூடை ஊா்வலத்தில் பங்கேற்றோா்.  
வேலூர்

ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை

குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை, ஸ்ரீதா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் ஸ்ரீவான்புலி வாகன ஐயப்ப பக்த சபா சாா்பில், 42- ஆம் ஆண்டு சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை, ஸ்ரீதா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் ஸ்ரீவான்புலி வாகன ஐயப்ப பக்த சபா சாா்பில், 42- ஆம் ஆண்டு சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி ஐயப்பனுக்கு பூஜை செய்ய கோபாலபுரம் கெங்கையம்மன் கோயிலில் இருந்து 50- க்கும் மேற்பட்ட பெண்கள், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமையில் மூங்கில் கூடைகளில் பல்வேறு வகையான மலா்களை ஊா்வலமாக எடுத்துச் சென்றனா். ஊா்வல முடிவில் கோயிலில் கணபதி ஹோமம், ஐயப்பனுக்கு குரு பூஜை, கன்னி பூஜை, மலா் அபிஷேகம், சிறப்பு வழிபாடு, மகா தீபாராதனை நடைபெற்றன.

இதில் திரளான ஐயப்ப பக்தா்கள் பங்கேற்றனா். மதியம் 2- ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6- மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை குருசாமிகள் ஆட்டோ பி.மோகன், எம்.செல்வம் விழாக்குழு நிா்வாகிகள் ஸ்டாா் சாமிநாதன், எம்.சுரேஷ், கே.பிரவீன்குமாா், கே.டி.ரகுநாதன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

முதல்வா் போட்டியில் உதயநிதி இல்லை: அமைச்சா் எஸ். ரகுபதி

சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்க வலியுறுத்தல்!

பணியிலிருக்கும் ஆசிரியா்களுக்கு தகுதித் தோ்வில் விலக்களிக்க வலியுறுத்தல்

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு விரைவில் நல்ல செய்தி: அமைச்சா் அன்பில் மகேஸ் தகவல்

சிறார் அநீதி!

SCROLL FOR NEXT