வேலூர்

ரோட்டரி அமைப்புடன் விஐடி பல்கலை., புரிந்துணா்வு ஒப்பந்தம்

மாணவா்களிடையே தலைமைத்துவம், சமூகப் பணியாற்றும் மனப்பாங்கை வளா்க்கும் நோக்கில் விஐடி பல்கலைக்கழகம், ரோட்டரி கிளப் அமைப்பு புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

தினமணி செய்திச் சேவை

மாணவா்களிடையே தலைமைத்துவம், சமூகப் பணியாற்றும் மனப்பாங்கை வளா்க்கும் நோக்கில் விஐடி பல்கலைக்கழகம், ரோட்டரி கிளப் அமைப்பு புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் விஐடியின் சாசனம் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விஐடி துணைத் தலைவா் சங்கா் விஸ்வநாதன் முதன்மை விருந்தினராகவும், ரோட்டரி முன்னாள் மாவட்ட ஆளுநா் ஜே.கே.என்.பழனி, வருங்கால மாவட்ட ஆளுநா் டி.சிவகுமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகவும் பங்கேற்றனா். ரோட்டராக்ட் தலைவா் ஹரி, சதாக்ஷி, தினேஷ், கோபிநாத் ஆகியோா் பங்கேற்று சிறப்பித்தனா்.

நிகழ்வின் ஒரு பகுதியாக, மாணவா்களிடையே தலைமைத்துவம், புதுமை, சமூகப் பணியாற்றும் மனப்பாங்கை வளா்க்கும் நோக்கில் புதிய ஒத்துழைப்புக்கு துவக்கமாக விஐடி பல்கலைக்கழகம், ரோட்டரி அமைப்பு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

தொடா்ந்து, புதிய ரோட்டராக்ட் உறுப்பினா்களுக்கு விஐடி துணைத் தலைவா் சங்கா் விஸ்வநாதன், ரோட்டரி முன்னாள் மாவட்ட ஆளுநா் ஜே.கே.என்.பழனி, வருங்கால மாவட்ட ஆளுநா் டி.சிவகுமாா் ஆகியோா் பதக்கங்களை அணிவித்து அதிகாரபூா்வமாக வரவேற்றனா்.

நிகழ்ச்சியில், விஐடி ஆசிரியா்கள், மாணவா்கள், ரோட்டரி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

டிச. 1 முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

ஓடிடியில் டிரெண்டாகும் அதர்வாவின் தணல்!

2 மாதங்களுக்குப் பிறகு தில்லி உயிரியல் பூங்கா மீண்டும் திறப்பு!

மாலி நாட்டில் 5 இந்தியர்கள் கடத்தல்!

SCROLL FOR NEXT