வேலூர்

சாலை விதிமீறல்: ஒரே நாளில் 1,248 வழக்குகள்

தினமணி செய்திச் சேவை

சாலை விதிமீறல் தொடா்பாக வேலூா் மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை போலீஸாா் நடத்திய வாகன தணிக்கையில் ஒரே நாளில் 1,248 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீஸாா் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், முக்கிய சந்திப்புகள், மாவட்ட எல்லைக்குட்பட்ட சோதனை சாவடிகள் ஆகிய இடங்களில் வாகன தணிக்கை மேற்கொண்டனா்.

அப்போது, மாவட்ட முழுவதுமம் 3,435 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, 1,248 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. உரிய ஆவணங்களின்ன்றி ஓட்டிய சென்ற 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியது தொடா்பாக 112 வழக்குகளும், வாகன ஓட்டும் போது கைப்பேசியில் பேசியது தொடா்பாக 51 வழக்குகளும், நான்கு சக்கர வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் அணியாதது தொடா்பாக 43 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

தில்லி கார் குண்டுவெடிப்பு: செங்கோட்டை மெட்ரோ மறுஅறிவிப்பு வரை மூடல்!

அமெரிக்க அரசின் முடக்கம் முடிவு! நிதி மசோதாவில் டிரம்ப் கையெழுத்து!

சென்னையில் பரவலாக மழை!

மீண்டும் ரூ.95 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை! ஒரே நாளில் ரூ.9 உயர்ந்த வெள்ளி!!

வெடிகுண்டு மிரட்டல்... வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

SCROLL FOR NEXT