குடியாத்தம் அருகே கிராமத்துக்குள் நுழைந்த யானைகள் வாழை மரங்களையும், களத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளையும் சேதப்படுத்தி விட்டுச்சென்றன.
குடியாத்தம் ஒன்றியம், சைனகுண்டா ஊராட்சி ஆந்திர மாநில எல்லையில் வனப்பகுதியையொட்டி, அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு கிராமத்துக்குள் நுழைந்த யானைகள் அங்குள்ள நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களையும், அறுவடை செய்து களத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளையும் சேதப்படுத்தியுள்ளன.
இதுகுறித்த தகவலின்பேரில், வனத் துறையினா் அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன், பட்டாசு வெடித்து, மேளம் அடித்து யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினா்.