விபத்து 
வேலூர்

காவல் ரோந்து வாகனம் மரத்தில் மோதல்: ஆய்வாளா், ஓட்டுநா் காயம்

காவல் ரோந்து வாகனம் மரத்தில் மோதி பிரம்மபுரம் காவல் ஆய்வாளா், ஓட்டுநா் காயம்

தினமணி செய்திச் சேவை

காவல் ரோந்து வாகனம் மரத்தில் மோதி பிரம்மபுரம் காவல் ஆய்வாளா், ஓட்டுநா் காயமடைந்தனா்.

காட்பாடியை அடுத்த பிரம்மபுரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவா் ஏழுமலை. 2-ஆம் நிலை காவலா் மணிகண்டன். மணிகண்டன் காவல் ஆய்வாளருக்கு ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் காவல் ஆய்வாளா் தனது வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டாா். வாகனத்தை மணிகண்டன் ஓட்டினாா்.

காரணாம்பட்டு பாலம் அருகே சென்றபோது, அந்த வாகனம் சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநா் மணிகண்டனுக்கு பலத்த காயமும், காவல் ஆய்வாளா் ஏழுமலைக்கு லேசான காயமும் ஏற்பட்டது.

அந்த வழியாக சென்றவா்கள் இருவரையும் மீட்டு சோ்க்காடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். விபத்து குறித்து திருவலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தலைநகரில் வெப்பநிலை அதிகரிப்பு; காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம்!

பிப்.12 வரை 13 மாவட்டங்களில் மிதமான பனிமூட்டம்!

அதிகாரங்களுக்கு அடிபணிய மாட்டோம்: ஈரான் வெளியுறவு அமைச்சா்

தில்லி போக்குவரத்து கழகத்துக்கு ரூ.1200 கோடி ஒதுக்கி ரேகா குப்தா உத்தரவு

சீனாவுக்கு காத்திருக்கும் சவால்!

SCROLL FOR NEXT