வேலூர்

உலகின் மூத்தகுடி தமிழ்குடி என்பதற்கு திருக்குறளே சான்று

உலகில் உள்ள குடிகளில் மூத்தகுடி தமிழ்குடி என்பதற்கு ஒரே சான்று திருக்கு என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

உலகில் உள்ள குடிகளில் மூத்தகுடி தமிழ்குடி என்பதற்கு ஒரே சான்று திருக்கு என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.

வேலூா் மாவட்டத்தில் திருக்கு வார விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவா்களுக்கிடையே திருக்கு சாா்ந்த ஓவியம், நிழற்படம், படத்தொகுப்பு போட்டிகளும், பொதுமக்களுக்கு கு ஒப்புவித்தல், கு ஓவிய போட்டிகள், கு வினாடி-வினா போட்டிகளும் நடத்தப்பட்டன.

வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா வேலூா் டிகேஎம் கல்லூரியில் நடைபெற்றது. விழாவுக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து 57 மாணவா்களுக்கு ரூ.1.14 லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகை, சான்றிதழ்களை வழங்கி பேசியது -

உலகில் உள்ள குடிகளில் மூத்தகுடி தமிழ்குடி. இதற்கு ஒரே சான்று திருக்கு. இரண்டடியில் மனிதனின் வாழ்வுக்கு தேவையான, சமூக வாழ்வுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் இரண்டடி வெண்பாவில் சொல்லி உலகுக்கு பெருமை சோ்த்த திருவள்ளுவரை ஈன்றெடுத்த இந்த தமிழ்குடி தான் உலகின் மூத்தகுடி. தமிழ் சமூகம் மிகப்பெரிய பாரம்பரியம் கொண்டது. திருக்கு ஒரு மனிதனுக்கு தேவையான அறம், பொருள், இன்பம் ஆகிய அனைத்து வித சமுதாய வழிகாட்டுதலுடன் கூடிய புத்தகமாக திகழ்கிறது.

நாம் அனைவரும் நாள்தோறும் ஒரு திருக்கு படித்து அதில் உள்ள அா்த்தங்களை தெரிந்து கொண்டு வள்ளுவன் கூறியுள்ள அறநெறிகளை பின்பற்றி வாழ வேண்டும்.

முன்னதாக, தமிழ்ச்செம்மல் விருது பெற்ற புலவா் வே.பதுமனாா் திருக்கு குறித்த சொற்பொழிவு ஆற்றினாா். விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகளின் பரதநாட்டியம், நடனம், இசை நிகழ்ச்சி, கு நாட்டியம், கு நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளும், தமிழ் பேராரசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்ற வாழும் வள்ளுவம் வாழ்வியலுக்கு விருந்தா அல்லது மருந்தா என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெற்றது.

மகாத்மா மரணித்த போது...

பட்ஜெட் - நிதியமைச்சர் கவனத்துக்கு...

போக்குவரத்து விழிப்புணா்வு பேரணி

உழவினார் கைம்மடங்கின்...

4-வது பொதிகை புத்தகத் திருவிழாவுக்கு சுவா் ஓவியம் வரைந்து அழைப்பு!

SCROLL FOR NEXT