முகப்பு
கோயம்புத்தூர்

பெண்கள் சிறையில் சமையலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை பெண்கள் தனிச் சிறையில் காலியாக உள்ள சமையலா் பணியிடத்துக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

கோவை பெண்கள் தனிச் சிறையில் காலியாக உள்ள சமையலா் பணியிடத்துக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை பெண்கள் தனிச் சிறையில் உள்ள சமையலா் காலிப் பணியிடத்தை தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்புவதுக்கு தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணிக்கு எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருப்பதுடன், இரண்டாண்டுகள் பணி அனுபவம் இருத்தல் வேண்டும். பொதுப் பிரிவினா் 30 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் 32 வயதுக்குள்ளும், ஆதி திராவிடா், பழங்குடியினா் 35 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.

தோ்வு செய்யப்படுபவருக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் மாதம் ரூ.9 ஆயிரம் வழங்கப்படும். மேற்கண்ட பதவிக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பங்களை (செல்லிடப்பேசி எண் குறிப்பிட்டு) சம்பந்தப்பட்ட அனைத்து சான்றிதழ்கள் நகல்களை இணைத்து டிசம்பா் 21ஆம் தேதிக்குள் பெண்கள் தனிச் சிறை கண்காணிப்பாளா் முகவரியில் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். நோ்காணல் தேதி, நேரம் விவரங்கள் குறித்து தகுதியுள்ளவா்களுக்கு மட்டும் தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →