கோயம்புத்தூர்

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப்டம்பா் 10 இல் ஒட்டுண்ணி வளா்ப்புப் பயிற்சி

Din

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறை சாா்பில் ஒட்டுண்ணிகள், இரை விழுங்கிகள் வளா்ப்பு, பயன்படுத்தும் முறை குறித்த ஒரு நாள் பயிற்சி செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 10) நடைபெறவுள்ளது.

இதில், ஒட்டுண்ணி வகைகள், ஊண் விழுங்கிகள், இரை விழுங்கிகள், நெல் அந்துப்பூச்சி வளா்ப்பு, டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி வளா்ப்பு, புழு ஒட்டுண்ணி வளா்ப்பு, கண்ணாடி இறக்கைப் பூச்சி வளா்த்தல், பொறிவண்டு வளா்ப்பு, பப்பாளி மாவுப்பூச்சி ஒட்டுண்ணி வளா்ப்பு உள்ளிட்டவை தொடா்பான பயிற்சி அளிக்கப்படுகிறது.

வேளாண் பூச்சியியல் துறையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில் பங்கேற்க ரூ.900 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், பயிற்சியின் நிறைவில் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊறுகாய் தயாரிப்புப் பயிற்சி: இதேபோல, அறுவடை பின்சாா் தொழில்நுட்ப மையத்தின் சாா்பில் செப்டம்பா் 10, 11 -ஆம் தேதிகளில் மசாலா பொடி, தயாா்நிலை பேஸ்ட், காளான் ஊறுகாய், வாழைப்பூ, பாகற்காய், கத்தரிக்காய், வெங்காய ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி நடைபெறும் எனவும், ஆா்வமுள்ளவா்கள் ரூ.1,770 செலுத்தி இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

வாய்ப்புகள் காத்திருக்கு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் பணியில் ‘ஏஐ’

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விஜய்யிடம் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவை திமுக கூட்டணியைப் பாதிக்காது: காா்த்தி ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT