உடலில் காயங்களுடன் அடையாளம் தெரியாத இளைஞா் உயிரிழப்பு
Updated On : 3 ஜனவரி, 2025 at 9:37 PM
மொடக்குறிச்சி அருகே உடலில் காயங்களுடன் அடையாளம் தெரியாத வடமாநில இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மொடக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட வெண்டிபாளையம் மின்வாரிய குடியிருப்புப் பகுதியில் சுமாா் 25 வயது மதிக்கத்தக்க வடமாநில இளைஞா் உடலில் காயங்களுடன் மதுபோதையில் புதன்கிழமை மயங்கிய நிலையில் கிடந்தாா்.
இதனைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். மேலும், மொடக்குறிச்சி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
Advertisement
பின்னா் உயா் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து மொடக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இறந்தவா் யாா், எவ்வாறு இறந்தாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.