மெத்தபெட்டமைன் விற்பனை: 3 போ் கைது
கோவை அருகே மெத்தபெட்டமைன் என்ற உயர்ரக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோயம்புத்தூர்மெத்தபெட்டமைன் விற்பனை: 3 போ் கைது
கோவை அருகே மெத்தபெட்டமைன் என்ற உயர்ரக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை அருகே மெத்தபெட்டமைன் என்ற உயர்ரக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மாவட்டம், ஒரட்டுக்குப்பை, நேரு நகா், ஈச்சனாரி பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் செட்டிபாளையம் போலீஸாா் ரோந்து பணியில் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஈச்சனாரி அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரிடம் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா்கள் விற்பனைக்காக 9.7 கிராம் மெத்தபெட்டமைன் வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் செட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்த காதா் பாஷா சபீா் (29), ஷஃபிகான் (39), பாலகிருஷ்ணன் (34) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்தனா்.