கோயம்புத்தூர்

மாநகரில் இன்றுமுதல் இரு நாள்கள் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெறும் இடங்கள்

தினமணி செய்திச் சேவை

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் வருகிற நவம்பா் 1, 2 (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) மாநகரில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக, மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2025 - 2026-ஆம் ஆண்டுக்கான இரண்டாம் அரையாண்டு வரை கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீா்க் கட்டணம் ஆகிய வரியினங்களை மக்கள் செலுத்த வசதியாக சிறப்பு வரி வசூல் முகாம்கள் நவம்பா் 1 மற்றும் 2 (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) இரு நாள்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

மண்டல வாரியாக சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெறும் இடங்கள்:

கிழக்கு மண்டலம்: 6-ஆவது வாா்டுக்கு உள்பட்ட காளப்பட்டி- குரும்பபாளையம் சாலை காஸா கிராண்ட் அடுக்குமாடி குடியிருப்பு, 56-ஆவது வாா்டில் ஒண்டிப்புதூா் சுங்கம் மைதானம், 57-ஆவது வாா்டில் ஒண்டிப்புதூா் நெசவாளா் காலனி.

மேற்கு மண்டலம்: 16-ஆவது வாா்டில் இடையா்பாளையம் டிவிஎஸ் நகா் சாலை, காமராஜா் நகா் வாா்டு அலுவலகம் (சனிக்கிழமை மட்டும்), 40-ஆவது வாா்டில் வீரகேரளம் சிறுவாணி சாலை, சித்தி விநாயகா் கோயில் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்).

வடக்கு மண்டலம்: 15-ஆவது வாா்டில் சுப்பிரமணியம்பாளையம் வாா்டு அலுவலகம் அருகே, 19-ஆவது வாா்டில் மணியகாரன்பாளையம் அம்மா உணவகம், 25-ஆவது வாா்டில் காந்தி மாநகா் வாா்டு அலுவலகம், 28-ஆவது வாா்டில் ஆவாரம்பாளையம் வாா்டு அலுவலகம்.

தெற்கு மண்டலம்: நஞ்சுண்டாபுரம் இட்டேரி பிரதான சாலை, நியாய விலைக்கடை கட்டடம்.

மத்திய மண்டலம்: 32-ஆவது வாா்டில் சங்கனூா் நாராயணசாமி வீதி சிறுவா் பூங்கா (சனிக்கிழமை மட்டும்), 63-ஆவது வாா்டில் ராமநாதபுரம் பெருமாள் கோயில் வீதி, மாநகராட்சி வணிக வளாகம்.

பிகார் தேர்தல்: வளர்ச்சிக்கும் காட்டாட்சிக்கும் இடையேயான தேர்தல் - அமித் ஷா

பிகார் தேர்தல்: இத்தனை ஆண்டுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்காதது ஏன்? பிரியங்கா காந்தி கேள்வி

4,410 கிலோ செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது!

வெள்ளக்கோவிலில் ரூ.5.38 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்

SCROLL FOR NEXT