மூக்கனூரில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரம்
அன்னூர் அருகே மூக்கனூரில் டெங்கு தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அன்னூர் அருகே மூக்கனூரில் டெங்கு தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அன்னூர் ஒன்றியம், வடக்கலூர் ஊராட்சிக்கு உள்பட்ட மூக்கனூரில் டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து . அக் கிராமத்தில் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் பத்மாவதி தலைமையில் டெங்கு தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், இந்த பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றுதல், லார்வா புழுக்களை ஒழிக்க அபேட் கரைசல் தெளித்தல், கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.
இந்த பணியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளவரசு, விஜயராணி, வட்டார மருத்துவ அலுவலர் தர்மராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுகாதார மேற்பார்வையாளர், தூய்மைக் காவலர்கள், டெங்கு தடுப்புப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.