முகப்பு
கோயம்புத்தூர்

அனுமதி பெறாத வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்தும் சிறப்பு முகாம்

அனுமதி பெறாத வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்துவதற்கான சிறப்பு முகாம் காரமடை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற் றது. 

Updated On : 18 ஏப்ரல் 2018, 9:18 am IST
பகிர்:

அனுமதி பெறாத வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்துவதற்கான சிறப்பு முகாம் காரமடை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற் றது. 
மேட்டுப்பாளையம் நகராட்சி, காரமடை பேரூராட்சி, காரமடை ஒன்றியத்திலுள்ள 10 ஊராட்சிகளில் நகர ஊரமைப்புத் துறையின் அனுமதி பெறாத மனைப் பிரிவுகளில் கிரயம் செய்யப்பட்டுள்ள வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்த வீட்டுமனைகளின் உரிமையாளர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்திரு ந்தனர்.
அவர்களுக்கு வரன்முறை ஆணை வழங்கும் வகையில் காரமடை ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை சிறப்பு முகாம் நடைபெற்றது. 
நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் யோகராஜா, உதவி இயக்குநர் சக்திவேல்  மேற்பார்வையில்  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், கோபால், 10 ஊராட்சிகளின் செயலர்கள், சிறப்பு அலுவலர்கள் பங்கேற்று விண்ணப்பங்களைப் பெற்றனர். இதற்காக, காரமடை ஒன்றிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
விண்ணப்பதாரர்களிடம் இணையதளப் பதிவு ஒப்புகை நகல், புகைப்பட அடையாளச் சான்று, மனைப் பிரிவு வரைபடம், விற்பனை ஆவணம், பட்டா-சிட்டா, வில்லங்கச் சான்று உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்பட்டு சரிபார்க்கப்பட்டன. 
பணம் செலுத்துவதற்கு வசதியாக அலுவலக வளாகத்திலேயே பாரத ஸ்டேட் வங்கியின் சிறப்பு மையம் அமைக்கப்பட்டிருந்து.  1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று விண்ணப்பங்களை வழங்கினர்.
இது குறித்து காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் கூறியது : 
முகாமில் காரமடை ஒன்றியத்திற்கு உள்பட்ட 10 ஊராட்சிகளில் இருந்து 250 மனுக்கள் பெறப்பட்டு 160 பேருக்கு வரன்முறை செய்யப்பட்ட உத்திரவு ஆணை வழங்கப்பட்டது. வரன்முறை செய்து கொள்வதற்கான கால அவகாசம் மே 3-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. முகாமில் பங்கேற்காதவர்கள்அலுவலக நாள்களில் தகுந்த ஆவணங்களுடன் காரமடை ஒன்றிய அலுவலகம் வந்து வரன்முறைப் பதிவை செய்து கொள்ளலாம் என்றார்.
காரமடை பேரூராட்சிப் பகுதிகளில் 400 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 65 பேருக்கு வரன்முறை உத்திரவு ஆணை வழங்கப்பட்டதாக பேரூராட்சி செயல் அலுவலர் பார்த்திபன் தெரிவித்தார். சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமையும் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.