முகப்பு
கோயம்புத்தூர்

யோகா விழிப்புணர்வு வாக்கத்தான்

சித்தாபுதூர் மனவளக் கலை மந்த்ரா தவ மையம் சார்பில் வாக்காத்தான் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 ஜூலை, 2018 at 7:20 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

சித்தாபுதூர் மனவளக் கலை மந்த்ரா தவ மையம் சார்பில் வாக்காத்தான் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 கோவை நேரு விளையாட்டு மைதானம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியை காவல் துணை ஆணையர் லட்சுமி, ஓய்வுபெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளர் வெள்ளிங்கிரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 
நிகழ்ச்சி குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.கணேஷ்குமார் கூறியதாவது:
குடும்ப மேன்மை மற்றும் எதிர்கால வாழ்க்கைத் தேவைக்காக மனிதர்கள் வேகமாக இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த கடின உழைப்பில் இருந்து ஆசுவாசப்படுத்தவும், இழந்த சக்தியை மீண்டும் பெறவும் யோகா மிகுந்த அவசியமாகிறது. யோகா மனதை நல்வழிப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. எனவே யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வாக்காத்தான் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நேரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய வாக்கத்தான் மகளிர் பாலிடெக்னிக் வழியாக மீண்டும் நேரு விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது. 
 இந்த நிகழ்ச்சியில்,  மையத்தின் துணைத் தலைவர் டி.வி.ஜெயலட்சுமி, இணைப் பொருளார் சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.