வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் திருட்டு
துடியலூரை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
துடியலூரை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இங்குள்ள நேதாஜி நகரில் வசிப்பவர் எம்.கணேசன். பெரியநாயக்கன்பாளையத்திலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவர் சாமநாயக்கன்பாளையத்திலுள்ள தனது தாயார் வீட்டுக்கு திங்கள்கிழமை சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 18 பவுன் நகைகள், ரூ. 7 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பெ.நா.பாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர்.