மர்மக் காய்ச்சல்: மருத்துவ முகாம் அமைத்துக் கண்காணிப்பு
பொள்ளாச்சி அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதையடுத்து
பொள்ளாச்சி அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதையடுத்து சுகாதாரத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை மருத்துவ முகாம் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம், பாலமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோருக்கு கடந்த சில நாள்களாக மர்மக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாலமநல்லூர் கிராமத்தில் மருத்துவக்குழு அமைத்து சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருவதுடன், பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொண்டுள்ளனர்.
மேலும், 30 துப்புரவுப் பணியாளர்களை கொண்டு அங்கு சுகாதாரப் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.