வெளியூர்களில் இருந்து கற்பகம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்காக உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து இலவச பேருந்து சேவை தொடங்கப்படுகிறது.
இது தொடர்பாக மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் அமைந்துள்ள கற்பகம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்துவித நோய்களுக்கும் இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனைக்கு வெளியூர்களில் இருந்து வரும் நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு புதன்கிழமை (ஏப்ரல் 24) முதல் உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி காலை 11 மணிக்கு இலவச பேருந்து சேவை தொடங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை நாள்கள் தவிர அனைத்து நாள்களிலும் இயக்கப்படும் இந்த பேருந்து, கரும்புக்கடை, ஆத்துப்பாலம், குறிச்சி, சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட், மலுமிச்சம்பட்டி, ஒத்தக்கால்மண்டபம் வழியாக மருத்துவமனையை சென்றடையும்.
இதேபோல், மாலை 4 மணியளவில் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு இதே வழியில் உக்கடம் பேருந்து நிலையத்துக்கு பேருந்து சேவை நடைபெறும். மேற்கண்ட பேருந்து நிலையம், நிறுத்தங்களில் இருந்து பொதுமக்கள் இந்த இலவச சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.