கோயம்புத்தூர்

மேற்கு மண்டலத்தில் விபத்து உயிரிழப்பு 19% குறைந்துள்ளது

தமிழகத்தில் மேற்கு மண்டலத்தில் விபத்து உயிரிழப்புகள் கடந்த  ஆண்டை விட 19 சதவீதம் குறைந்துள்ளதாக மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா தெரிவித்தார்.

DIN

தமிழகத்தில் மேற்கு மண்டலத்தில் விபத்து உயிரிழப்புகள் கடந்த  ஆண்டை விட 19 சதவீதம் குறைந்துள்ளதாக மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா தெரிவித்தார்.
அன்னூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
 மேற்கு மண்டலத்தில் விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 19 சதவீதம் குறைந்துள்ளது. உயிரிழப்பு இல்லாத விபத்துகள் 12 சதவீதம் குறைந்துள்ளது. பள்ளி, கல்லூரிகளில் காவல் துறை மூலம் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பெண் காவலர்கள் மூலம் தகுந்த ஆலோசனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறை, மாணவர்களிடையே நல்லுறவு ஏற்படுத்தும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT