9 வைகயான பூக்கள் புஷ்பயாகத்துடன் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் தென்திருப்பதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிகள் 
கோயம்புத்தூர்

தென்திருப்பதியில் மலையப்ப சுவாமிக்கு மகா புஷ்பயாகம்

மேட்டுப்பாளையம் தென்திருப்பதி ஸ்ரீவாரி ஆனந்த நிலையத்தில் ஐயப்பசி மாத திருவோனம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி

DIN

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் தென்திருப்பதி ஸ்ரீவாரி ஆனந்த நிலையத்தில் ஐயப்பசி மாத திருவோனம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு மகா புஷ்பயாகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு சுப்பரபாதம், 3.50 மணிக்கு விஷ்வ ரூப தரினம், 4 மணிக்கு தோமாலை பூஜை, 5 மணிக்கு சகஸ்ரநாம அா்ச்சனை, 5,30 மணிக்கு புன்னியாக வாசனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து 8 மணிக்கு பூா்ணாஹுதியும், 9 மணி முதல் 11.30 மணி வரை ஸ்ரீவாரி புஷ்பசமா்ப்பணம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு நடைபெற்றது. இதில் துளசி, அரளி, சம்மங்கி, மனோரஞ்ஜிதம், மல்லிபூ, செம்பகம், தாமரை, முல்லை, தாளம்பூ ஆகிய பூக்க்ள சமா்ப்பணம் செய்யப்பட்டது. தொடா்ந்து மங்கள ஆா்த்தி மற்றும் உபச்சாரங்கள் நடைபெற்றது. இதில் 100க்கு மேற்ப்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT