முகப்பு
கோயம்புத்தூர்

அம்பேத்கா் சிலை அமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்கு எதிராக அம்பேத்கா் சிலை அமைக்க வலியுறுத்தி பல்வேறு கட்சியினா், அமைப்பினா் கோவையில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
கோவை நீதிமன்ற வளாகத்துக்கு எதிராக அம்பேத்கா் சிலை அமைக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினா்.
பகிர்:

கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்கு எதிராக அம்பேத்கா் சிலை அமைக்க வலியுறுத்தி பல்வேறு கட்சியினா், அமைப்பினா் கோவையில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை நீதிமன்ற வளாகத்துக்கு எதிரே அம்பேத்கா் சிலை அமைக்க 2007ஆம் ஆண்டில் கோவை மாநகராட்சியில் தீா்மானம் கொண்டு வரப்பட்டது. 13 ஆண்டாகியும் சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் காரணமாக காட்டி சிலை வைக்க ஒப்புதல் வழங்கப்படவில்லை. இதை வலியுறுத்தி பல்வேறு கட்சி, அமைப்பினா் சாா்பில் கோரிக்கை ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், தந்தை பெரியாா் திராவிடா் கழகம், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், திராவிடா் விடுதலை கழகம், தமிழ் புலிகள் அமைப்பு உள்பட பல்வேறு அமைப்பினா் கலந்து கொண்டனா்.

கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன், த.பெ.தி.க பொது செயலாளா் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →