தொண்டாமுத்தூர் அருகே ஒற்றை காட்டு யானை தாக்கி முதியவர் பலி, 2 இளைஞர்கள் காயம்
தொண்டாமுத்தூர் அருகே ஒற்றை காட்டு யானை தாக்கியதில் முதியவர் இறந்தார்.
தொண்டாமுத்தூர் அருகே ஒற்றை காட்டு யானை தாக்கியதில் முதியவர் இறந்தார்.
கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள வாஞ்சியம்மன் நகர் பகுதிக்குள் இன்று அதிகாலை ஒற்றை காட்டு யானை புகுந்தது. அப்போது வீட்டின் அருகே இருந்த அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற முதியவரை காட்டுயானை தாக்கி தூக்கி வீசியுள்ளது.
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து ஆறுச்சாமி மற்றும் முத்து என்ற இரண்டு இளைஞர்களை யானை தூக்கி வீசியது.
இதில் கால் முறிவு ஏற்பட்டு படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இருவரையும் அப்பகுதி மக்கள்
108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த போளுவாம்பட்டி வனத்துறையினர் ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். மேலும் அப்பகுதியில் சடலமாக இருந்த ஆறுமுகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் வனத்துறை மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.