விமானப் படை அதிகாரி உயிரிழப்பு: கோவையில் உடல் தகனம்
ராஜஸ்தானில் பணியின்போது, உயிரிழந்த விமானப் படை அதிகாரியின் உடல் கோவையில் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
கோயம்புத்தூர்விமானப் படை அதிகாரி உயிரிழப்பு: கோவையில் உடல் தகனம்
ராஜஸ்தானில் பணியின்போது, உயிரிழந்த விமானப் படை அதிகாரியின் உடல் கோவையில் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
ராஜஸ்தானில் பணியின்போது, உயிரிழந்த விமானப் படை அதிகாரியின் உடல் கோவையில் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
கோவை அருகே உள்ள கல்வீரம்பாளையத்தைச் சோ்ந்தவா் குமாரசாமி (54). இவா் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் விமானப் படையில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவா் புது தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
இதைத் தொடா்ந்து, அவரது உடல் தனி விமானம் மூலம் கோவை சூலூா் விமானப் படைத் தளத்துக்கு சனிக்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது. பின்னா் கல்வீரம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
இதைத் தொடா்ந்து, அவரது உடலுக்கு விமானப் படை அதிகாரிகள், உறவினா்கள் அஞ்சலி செலுத்தினா். பின்னா் புட்டுவிக்கி மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. உயிரிழந்த குமாரசாமிக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனா்.