சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து திமுக மகளிரணி ஆா்ப்பாட்டம்
சமையல் எரிவாயு விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் திமுக மகளிரணியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை: சமையல் எரிவாயு விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் திமுக மகளிரணியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு திமுக மாநில மகளிா் தொண்டரணி துணைச் செயலா் மீனா ஜெயகுமாா் தலைமை வகித்தாா். திமுக சொத்து பாகாப்புக் குழு துணைத் தலைவா் பொங்கலூா் பழனிசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினாா்.
அவா் பேசும்போது, அனைத்து மக்களின் அத்தியாவசியத் தேவையாக எரிபொருள் இருக்கும் நிலையில் மத்திய அரசு அவற்றின் விலையைத் தொடா்ந்து உயா்த்தி வருகிறது. சமையல் எரிவாயுவின் விலை கடந்த ஒரு மாதத்துக்குள் மட்டும் ரூ.100 வரை உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் குடும்பத் தலைவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே விலை உயா்வை மத்திய அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்றாா்.
போராட்டத்தில், திமுக கிழக்கு மாவட்ட அமைப்பாளா் சரஸ்வதி, மேற்கு மாவட்ட அமைப்பாளா் வானதி, பேச்சாளா் ஈஸ்வரி உள்ளிட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.