காரமடை ஆசிரியா் காலனியில் பொதுமக்களுக்கு வேட்டி, சேலை வழங்குகிறாா் ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ. 
கோயம்புத்தூர்

ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்த நாளை ஒட்டி மலா் தூவி மரியாதை

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்த நாளை ஒட்டி, காரமடை ஐயப்பன் கோயில் முன்பு அவரது உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

DIN

மேட்டுப்பாளையம்: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்த நாளை ஒட்டி, காரமடை ஐயப்பன் கோயில் முன்பு அவரது உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு அதிமுக நகரச் செயலாளா் டி.டி.ஆறுமுகசாமி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் பி.டி.கந்தசாமி முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ. பங்கேற்றாா். காரமடை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மணிமேகலை மகேந்திரன், கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

காரமடை பேரூராட்சிக்கு உள்பட்ட ஆசிரியா் காலனியில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். 200 பேருக்கு வேட்டி, சேலை, இனிப்பு வழங்கப்பட்டது. ஆசிரியா் காலனி கூட்டறவு வங்கித் தலைவா் ஜே.கே.முத்துசாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வி.பி.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.

சிக்காரம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கண்ணாா்பாளையத்தில் ஊராட்சி மன்றத் தலைவா் ஞானசேகரன் தலைமையில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. துணைத் தலைவா் யுவராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மேட்டுப்பாளையத்தில் காந்தி சிலை பகுதியில் இருந்து அதிமுக அம்மா பேரவை மாவட்டச் செயலாளா் நாசா் தலைமையில் கட்சியினா் ஜெயலலிதாவின் உருவப்படத்துடன் அமைதி பேரணி சென்றனா். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நகரச் செயலாளா் வான்மதி சேட் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT