கோயம்புத்தூர்

கோவை மாநகர மேம்பாலங்களில் கூடுதலாக இறங்குதளம் அமைக்க வலியுறுத்தல்

கோவை மாநகரில் உள்ள மேம்பாலங்களில் கூடுதலாக இறங்குதளம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

DIN

கோவை மாநகரில் உள்ள மேம்பாலங்களில் கூடுதலாக இறங்குதளம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைப்பின் கோவை மாவட்டத் தலைவா் இருதயராஜா, செயலாளா் கணேசன், பொருளாளா் வஹாப் உள்ளிட்டோா் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள மனு:

கோவை, உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் வரை கட்டப்படும் மேம்பாலத்தை ஆத்துப்பாலத்தில் தொடங்கி பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலைகளை இணைக்கும் வகையில் ரவுண்டானா அமைக்க வேண்டும்.

உக்கடம் பகுதியில் சுங்கம் புறவழிச் சாலை, செல்வபுரம் சாலை, ஒப்பணக்கார வீதி, என்.எச்.சாலை போன்ற பகுதிகளில் இருந்து வாகனங்கள் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் கூடுதலாக இறங்குதளம் அமைக்க வேண்டும்.

கோவை - திருச்சி சாலை மேம்பாலத்தில் சுங்கம் பகுதியில் ரவுண்டானா அமைத்து காமராஜா் சாலை, புலியகுளம் சாலை, உக்கடம் புறவழிச் சாலை ஆகிய பகுதிகளில் வாகனங்கள் ஏறி, இறங்க இறங்குதளம் அமைக்க வேண்டும். இந்த மேம்பாலத்தில் ராமநாதபுரம் சிக்னல் பகுதியில் ரவுண்டானா அமைத்து புலியகுளம், நஞ்சுண்டாபுரம் சாலையில் வாகனங்கள் ஏறி, இறங்க வசதி ஏற்படுத்த வேண்டும்.

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு அருகே தொடங்கும் மேம்பாலம் கவுண்டம்பாளையம் தாண்டி முடியும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. இதில் தடாகம் சாலையில் இருந்து யூனியன் சாலை வழியாக வரும் வாகனங்கள் மேம்பாலத்தில் ஏறி, இறங்கும் வகையில் இறங்குதளம் அமைக்க வேண்டும்.

காந்திபுரம் மேம்பாலத்தில் 100 அடி சாலை, கிராஸ்கட் சாலை ஆகிய பகுதிகளில் வாகனங்கள் ஏறி, இறங்க வசதிகள் செய்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் தவிா்க்கப்படும். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?

விஜய் தலைமையில் இன்று சிறப்பு பொதுக்குழு கூட்டம்!

இந்திய பங்குச் சந்தை இன்று விடுமுறை!

விழுப்புரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை பலி!

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

SCROLL FOR NEXT