கோவையில் 6 வழித்தடத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 6 வழித்தடத்தில் சிறப்பு பேருந்துகள் திங்கள்கிழமை இயக்கப்பட்டுள்ளன.
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 6 வழித்தடத்தில் சிறப்பு பேருந்துகள் திங்கள்கிழமை இயக்கப்பட்டுள்ளன.
கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 4 ஆம் கட்ட பொது முடக்கம் மே 31 வரை அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 3 ஆம் கட்ட பொது முடக்கம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிந்த நிலையில் திங்கள்கிழமை முதல் கோவை உள்பட 25 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி அரசு ஊழியர்கள் பணிக்கு செல்லும் வகையில் போக்குவரத்துக் கழகம் சார்பில் திங்கள்கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி கோவை மண்டலத்துக்குள்பட்ட கோவை கோட்டத்தில் 6 சிறப்பு பேருந்துகள் திங்கள்கிழமை இயக்கப்பட்டன.
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அன்னூர், கருமத்தம்பட்டி, வடவள்ளி, தீத்திப்பாளையம் ஆகிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டன.