முகப்பு
கோயம்புத்தூர்

முடீஸ் எஸ்டேட் பஜாரில் கடைகளை சேதப்படுத்திய யானைகள்

வால்பாறையை அடுத்த முடீஸ் எஸ்டேட் பஜாருக்குள் புகுந்த நான்கு யானைகள் மூன்று கடைகளை சேதப்படுத்தின.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
யானைகளால் சேதப்படுத்தப்பட்ட பொருள்கள்.
பகிர்:

வால்பாறையை அடுத்த முடீஸ் எஸ்டேட் பஜாருக்குள் புகுந்த நான்கு யானைகள் மூன்று கடைகளை சேதப்படுத்தின.

வால்பாறை எஸ்டேட்டை ஒட்டியுள்ள வனங்களில் ஏராளமான யானைகள் உள்ளன. சமீப காலமாக வனத்தை விட்டு இரவு நேரத்தில் வெளியேறும் யானைகள் எஸ்டேட் பகுதிகளில் உள்ள தொழிலாளா்களின் குடியிருப்புகள், ரேஷன் கடைகளை சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், வால்பாறையை அடுத்துள்ள முடீஸ் எஸ்டேட் பஜாருக்குள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நுழைந்த மூன்று யானைகள் அங்கிருந்த மூன்று கடைகளை முட்டித் தள்ளி சேதப்படுத்தின.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் தீப் பந்தங்கள் ஏந்தியும், பட்டாசு வெடித்தும் நீண்ட நேரம் போராடி யானையை விரட்டியுள்ளனா். இருப்பினும் மனிவண்ணன், கதிரேசன், கண்ணன் ஆகியோரின் கடைகளை உடைத்து அதிலிருந்த பொருள்களை சேதப்படுத்தின.

முழு கட்டுரையைப் படிக்க →