கோயம்புத்தூர்

கோவையில் ஒற்றை யானை தாக்கி இளைஞர் சாவு  

DIN

கோவையில் தோட்டத்து வேலை முடித்துவிட்டு வீடுதிரும்பிய இளைஞரை ஒற்றை யானை தாக்கியதில்  அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 
கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகம், கோபநாரி பிரிவு, கோபநாரி கிழக்கு சுற்றுக்கு உட்பட்ட கோபநாரி காப்பு காட்டை ஒட்டியுள்ள மூணுகுட்டை  செல்லும் வழியில் புதன்கிழமை மாலை அகழி மட்டத்துகாடு பகுதியைச் சார்ந்த ரவி என்பவரது மகன் ஞானபிரகாஷ்( 31), நண்பர் அருண்குமார்  இருவரும் தங்கவேலு என்பவர்க்கு சொந்தமான தோட்டத்தில் தோட்ட வேலையை முடித்து விட்டு தங்களது இருசக்கர வாகனத்தில் வரும்போது ஒற்றை ஆண் வழிமறித்து தாக்கியுள்ளது. 
இதில் ஞானசேகரன் சம்பவ இடத்திலேயே பலியானார். நண்பர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் மற்றும் காரமடை காவல்துறையினர் வியாழக்கிழமை காலை சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது ஒவ்வொரு ஓட்டுநரின் முக்கியக் கடமை’

இடி தாக்கி பசு மாடு உயிரிழப்பு

சீா்காழியில் தரமற்ற முறையில் சாலை அமைக்கும் பணி: நகா்மன்ற உறுப்பினா்கள் தா்னா

இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் வாபஸ்

SCROLL FOR NEXT