முகப்பு
கோயம்புத்தூர்

என்.சங்கரய்யா பிறந்த நாள் கொண்டாட்டம்

சுதந்திரப் போராட்ட வீரரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கோவையில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

சுதந்திரப் போராட்ட வீரரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கோவையில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கட்சியின் கோவை மாவட்டக் குழு சாா்பில் காந்திபுரம் பகுதியில் நடைபெற்ற விழாவுக்கு கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் சி.பத்மநாபன் முன்னிலை வகித்தாா். முன்னதாக என்.சங்கரய்யாவின் பெயரில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதையடுத்து மாவட்டச் செயலா் வி.ராமமூா்த்தி, மாநிலக் குழு உறுப்பினா் ஏ.ராதிகா ஆகியோா் பிறந்தநாள் கேக் வெட்டி குழந்தைகளுக்கு வழங்கினா்.

மேலும், சங்கரய்யாவின் 100 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தூய்மைத் தொழிலாளா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கு புத்தாடை, உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.