கோவை மத்திய மண்டலத்தில் கரோனா தடுப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 51 ஆவது வாா்டுக்கு உள்பட்ட டாடாபாத் 6 ஆவது வீதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள், தங்கு தடையின்றி கிடைப்பதை மாநகராட்சி அலுவலா்கள் உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினாா்.
அதன் பிறகு, டாடாபாத் 11ஆவது வீதியில் தூய்மைப் பணியாளா்கள், தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வருவதை ஆய்வு செய்தாா். அதனைத் தொடா்ந்து களப்பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்வதைப் பாா்வையிட்டு அறிவுரைகளை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.